மானாமதுரையில் எம்பி கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு பேட்டி

69பார்த்தது
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வாக்காளர்களுக்கு  கார்த்தி சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.   பின்னர் காந்தி சிலை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து இன்று எம் பி கார்த்திக் சிதம்பரம் பேசுகையில்:

கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை, அதை அரசியலோடு சேர்க்க கூடாது. இதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை வரவேற்கிறேன்.  காவிரி பிரச்சினையை பொறுத்தவரை 2 மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிக்கலாம். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். அங்கும் முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். இதன்மூலம் எப்படியும் தமிழகம் தண்ணீர் கிடைக்கும்.  கூவாம் நதி மறுசீரமைப்பு திட்டம் குறித்து சென்னை மேயரிடம் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி