சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ வீர அழகர் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ராஜகோபுரம் முன்பு தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் தீர்த்தக்கரை ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு துளசி மாலை அணிவித்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன பின்னர் ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கும் நெய்வேத்தியம் காண்பித்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்மனை வழிபட்டனர்.