எல்லை பிடாரியம்மன் கோவிலில் செவ்வாய் சாட்டு உற்சவ விழா

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே எல்லை பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் செவ்வாய் சாட்டு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம் அதன்படி கடந்த மாதம் 27 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா தொடங்கியது கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இன்று இரவு சுமார் 8 மணி அளவில் செவ்வாய் சாட்டு உற்சவத்தையொட்டி கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அசைவ உணவுகள் கொழுக்கட்டை பணியாரம் ஆகியவற்றை சமைத்தனர் அவற்றை புதிய மண்சட்டிகளில் வைத்து அதன் மீது தீப்பந்தம் ஏற்றி பின்னர் அவற்றை
குறத்தி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து
பெண்கள் மேளதாளம் வானவேடிக்கையுடன் மானாமதுரை பழைய பேருந்து நிலைய பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக
ஊர்வலம் எல்லை பிடாரி அம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி