மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 17. 09. 2024 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2 , FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்களை மேற்படி குறிப்பிட்ட தினங்களில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் FL2 , FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் 17. 09. 2024 அன்று மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.