சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோவின் மகன் நிஷாந்த் ரூசோவுக்கும் - ஸ்னேகா கேத்தரின் திருமண நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்பொழுது மணமகன் நிஷாந்த்தின் நண்பர்கள், மறைந்த மணமகளின் தந்தை மாவீரன் ரூசோவின் மார்பளவு உருவ சிலையை பரிசாக வழங்கி அனைவரையும் நெகிழ செய்தனர். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.