விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைப்பு

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா வ. சூரக்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பஜக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராமசாமி சார்பில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை நேற்று (செப்.8) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலமாக எடுதுச்செல்லப்பட்டது.

கரகாட்டம் நாதஸ்வர முழங்க ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டு கிழக்கு தெரு ஒத்தால் மண்டபம் பிள்ளையார் கோயில் சென்று அருள்மிகு ஶ்ரீ சூரமாகாலி அம்மன் கோயில் வழியாக சென்று ரகு தீர்த்தம் மண்டப குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் கரைக்கபட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கிராம மக்கள் இளைஞர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி