சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் குடவரை கோவில்களில் ஒன்றாகவும் விளங்கும் பிள்ளையார்பட்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும் சாமி தரிசனம் மேற்கொண்டார்.