சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகர் ஏ. காலனியை சேர்ந்தவர் கோகிலாதேவி (வயது 65). இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவரதுகடைக்கு 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். ஒருவர் வாகனத்தில் அமர்ந்து கொண்டும், மற்றொருவர் கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில், சிகரெட் கேட்டார். சிகரெட் எடுக்க முற்பட்டபோது கோகிலா தேவி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்றனர். சிவகங்கை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.