சிவகங்கை மாவட்டத்தில் வரும் 13. ம் தேதி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு முகாம்நடைபெறஉள்ளது.
இதில் பல்வேறு துறைஅலுவலர்கள்கலந்து கொண்டு பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கஉள்ளனர். மாணவர்கள் கல்லூரியில் படிக்கவிரும்பும் பாடப்பிரிவுகள், தொழில் படிப்புகள், கல்விக்கடன் வழங்குதல், மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், முதல்பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் மற்றும் சலுகைகள், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்ன மாதிரியான உதவித்தொகை எல்லாம் தமிழக அரசு மூலம் வழங்கப்படுகிறது அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கபட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராதமாணவர்களுக்கு உயர்வுக்குப் படி முகாமானது நடைபெற உள்ளது என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.