சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சூரக்குடியில் புதிய அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவம், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளி, வெளி நோயாளிகள் பிரிவு, ஸ்கேன் சென்டர் மற்றும் பல்வேறு சிறப்பு சிகிச்சைக்கான வார்டுகள் உள்ள நிலையில், சுகாதாரம் காக்கபட வேண்டிய மருத்துவமனை சுகாதார சீர்கேடாக மாறி உள்ளது.
மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீர் என வளாகம் முழுவதும் பரவி, கொசுக்கள் உற்பத்தியாகி சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உடனடியாக கழிவுகளை அகற்றி, மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.