அறக்கட்டளையின் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பீனிக்ஸ் எஜுகேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அலெக்ஸ்சாம். இவர் சிவகங்கை மாவட்டம்மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கு அவரது அறக்கட்டளை மூலம்இலவசமாக அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக வாட்சப் மற்றும் சமூகவலையதளம் முலமாக விளம்பரங்களை செய்து மாணவர்களை வரவழைத்துள்ளார்.

அவர்களது, சான்றிதழ், போட்டோக்களை பெற்றுத் கொண்டு கவுன்சிலிங் அனைத்தும் முடிந்த பிறகு எங்களது ட்ரஸ்டில் பணம் இல்லை என்றும் மாணவர்களுடைய ஒரிஜினல் சான்றிதழை வழங்காமலும் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு கல்விக்கு உதவிசெய்வதாககூறி வெளிநாடுகளில் இருந்து ட்ரஸ்டுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு பின்னர் ட்ரஸ்டில் பணம் இல்லை என்றும் நீங்கள் தான்உங்கள் குழந்தைகளுடைய அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நூதன முறையில் ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

பல மாணவர்கள் தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரிகளில் சேர முடியாமலும் மிகவும் தவிர்த்து வருகின்றனர். ஏழை மாணவர்களை வரவழைத்து போட்டோ எடுத்து வெளிநாடுகளில் இந்த பணம் பெற்றுக் கொண்டு பின்னர் பணம்இல்லை என மாணவர்களை திட்டமிட்டு நுதனமுறையில் ஏமாற்றுவதாக அலெக்ஸ்சாம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி