சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடபொய்கை கிராமத்தில் வயல்வெளிகளில் நின்று கொண்டிருந்த இரண்டு மஞ்சுவிரட்டு மாடுகளை நான்கு பேர் கொண்ட கும்பல் டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றபோது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் டாட்டா ஏசி வாகனத்தை வழிமறித்து மஞ்சுவிரட்டு காளைகளை எதற்காக ஏற்றி செல்கின்றனர்? இவர்கள் மாடு திருடர்களா? இந்த மாடு யாருடையது? என்றும் விசாரித்தபோது மாட்டை ஏற்றி சென்றவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அதே பகுதியை சேர்ந்த பாக்கியம் கண்டனூரை சேர்ந்த மகேஷ் கமுதியைச் சேர்ந்த முனியசாமி டாட்டா ஏசி ஓட்டுநர் நல்லமுத்து ஆகிய நான்கு பேரை பிடித்து குன்றக்குடி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
குன்றக்குடி காவல் துறையினர் மஞ்சுவிரட்டு காளைகள் யாருடையது என்றும் எதற்காக இந்த காளைகளை அவர்கள் வண்டியில் ஏற்றி சென்றனர் என்பது குறித்து இன்று(செப்.9) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.