சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணாயிரமூா்த்தி பள்ளியில் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், இவரது நடவடிக்கையால் இந்தப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை சிவசங்கரி தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாா் தெரிவித்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் வடிவேல் கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரடியாக வந்து தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், போராட்டம் நடத்திய பெற்றோரிடம் விசாரணை நடத்தினாா். விசாரணை அறிக்கை அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமை ஆசிரியா் கண்ணாயிர மூா்த்தியை சிவகங்கை மாவட்டம் முறையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.