தேவகோட்டையில் இலவச கண் மருத்துவ முகாம்

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் திருவேகம்புத்தூர் அரசு சுகாதார மருத்துவமனையும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமினை பள்ளியின் அதிபர் அருட்தந்தை பாபு வின்சென்ட் ராஜா தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை சேவியர் ராஜா முன்னிலை வகித்தார். 2200 மாணவர்களும் 80 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும மருத்துவர்கள் உரிய பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்கினர். திருவேகம்பத்தூர் கண் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரி, அரவிந்த் கண் மருத்துவர்கள் மருத்துவர் பிரியங்கா, ஜீஸ் மா ரெட்டி, முகாமின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அருட்தந்தை விக்டர் டிசோசா, எட்வின் ரொசாரியோ, ஞான அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமை ஓவிய ஆசிரியர் சேவியர் ஒருங்கிணைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி