சங்ககிரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஆசிரியர் காலனி நிர்மலா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த தேவராஜன் மனைவி தேவகி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் தயாளினி (வயது 26). இவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டிலிருந்துள்ளார். சிறுவயதில் இருந்து இதயம் தொடர்பான நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. அதற்காக அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மின்விசிறியில் தயாளினி துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று(அக்.26) இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.