இடங்கணசாலை: ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள்

79பார்த்தது
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள்(கடை எண் 7164, 7165) செயல்பட்டு வருகின்றன. ஒரே பகுதியில் எதிர் எதிரே அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சாலையோரம் ஆங்காங்கே அமர்ந்து மது குடிக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் ரகளையில் ஈடுபவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி