தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.