78வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி வெங்கட்டநாயக்கன்பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப், வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை ஆகியவைகள் இணைந்து நடத்தும் 30வது ரத்த தான முகாம் சங்ககிரி வி. என். பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவர் ஜெகநாதன் முகாமினை தொடங்கி வைத்தார்.
சங்ககரி பேரூராட்சி 9வது வார்டு உசண்முகம், முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
இம்முகாமில் யங்ஸ்டார்
கிரிக்கெட் கிளப்நிர்வாகிகள், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், ரோட்டரி கிளப், இன்னர்வீல் சங்கம், அரிமா சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்த 30 பெண்கள் உள்பட 202 பேர் ரத்த தானம் செய்தனர்.
திமுக நகர செயலாளர் கே. எம். முருகன், மின்வாரிய பொறியாளர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண்பிரபு, யங்ஸ்டார்
கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், அமுதச்சுடர் அறக்கட்டளை தலைவர் சத்யபிரகாஷ், பாமக நகர செயலாளர் அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.