
வைகுந்தம் மேம்பாலத்தில் டூ வீலர் விபத்து.. வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலாமங்கலம் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24). அவருடைய நண்பர் தனுஷ் (21). இவர்கள் இருவரும் கோவையில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றனர். சங்ககிரி அருகே வைகுந்தம் மேம்பாலம் பகுதியில் வந்த போது விக்னேஷ், மோட்டார் சைக்கிளை சர்வீஸ் சாலையில் திருப்பாமல் நேராக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதில் அங்கு மேம்பால பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் திட்டில் மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். தனுஷ் காயம் அடைந்தார். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.