சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் ஸ்ரீ மாளிகைபுரம் அம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். கடம்பூரில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர்.