சேலம்: விடுதி காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை

77பார்த்தது
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதி காப்பாளர் ஆசிரியர் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று(அக்.6) நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் முருகேசன் பேசும் போது பல ஆண்டு காலமாக காப்பாளருக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. எனவே பதவி உயர்வு வழங்கிட வேண்டும், கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த சமையல் கூட திட்டத்தை கைவிட வேண்டும், பணி நீட்டிப்பு ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும், விடுதிகளின் காப்பாளர் பணியிடங்கள் மூன்றாண்டு காலமாக காலியாக உள்ளது. அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு உடனடியாக எங்களுடைய தீர்மானத்தின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி