அரசிராமணிசெட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

71பார்த்தது
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி நாடார் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

வரலட்சுமி நோன்பு மற்றும் 5வது வார ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அருள்மிகு மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய, திரவிய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இத்தனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பட்டாட்ச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் நடைபெற்ற பின்னர் உலக நன்மை வேண்டியும், மாங்கல்ய வரம் வேண்டியும் திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி