சுதந்திர தினவிழாவையொட்டி 385 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

56பார்த்தது
சுதந்திர தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டன. அந்தந்த ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக்கூட்டங்களில் அதன் தலைவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஓமலூர் ஒன்றியம் சாமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி