மறைந்த ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள வீடு, அலிபாக் கடற்கரை பங்களா, ரூ.350-க்கும் கோடிக்கும் மேலான நிரந்தர வைப்பு தொகை என அவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி இருக்கும் என கூறியுள்ளது. மேலும் 165 பில்லியன் டாலர் மதிப்புடைய டாட்டா குழுமத்தின் நிறுவனமான டாடா சன்ஸில் 0.83% பங்குகளையும் அவர் வைத்திருந்ததாகவும், 20-30 சொகுசு கார்களை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளது.