சேலம் நகரம் - Salem City

சேலம்: லஞ்சம் பெற்ற மின்வாரிய அலுவலர்கள்; கையும் களவுமாக பிடிபட்டனர்...வீடியோ

சேலம் பூசாரிபட்டி வட்டம் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (37). இவர் புதிய வீட்டுக்கு முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்துக்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்துவதற்காக சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் மணி என்பவரை அணுகியுள்ளார். இதற்காக மணி ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர் ரூ. 3,000 தருமாறும், போர்மேன் ராதாகிருஷ்ணனுக்கு தனியாக ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்தனர். அப்போது மணிவண்ணன் மணியிடம் ரூ. 3,000-ம், ராதாகிருஷ்ணனிடம் ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా