சேலம்: எடப்பாடி பழனிசாமியிடம் நெசவாளர் கூட்டமைப்பினர் மனு

63பார்த்தது
சேலம்: எடப்பாடி பழனிசாமியிடம் நெசவாளர் கூட்டமைப்பினர் மனு
சேலம் மாவட்ட அனைத்து நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவு தொழில் உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட துணை தொழில்களும் உள்ளன. 

மாவட்டம் முழுவதும் நெசவு தொழிலில் 5 லட்சம் பேரும், மாநகராட்சி பகுதியில் 2 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது நூல் விலை, மின்கட்டணம் ஆகியவற்றின் உயர்வால் நெசவு தொழில் நலிவடைந்துள்ளது. 100 தறிகள் இயங்கிய இடத்தில் தற்போது 50 தறிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் வந்த நெசவாளருக்கு தற்போது மாதம் ரூ. 6 ஆயிரம் மட்டுமே வருமானம் வருகிறது. இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். 

இந்த நிலையில் நெசவு தொழில் வைத்திருக்கும் இடத்திற்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 27 தொழில் வரி விதிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு வரி விதித்தால் வருடம் ரூ. 20 ஆயிரம் தொழில் வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். நெசவு தொழிலாளி எப்படி வருடம் ரூ. 20 ஆயிரம் தொழில் வரி கட்ட முடியும். 

எனவே தொழில் வரி விதிக்க நெசவு தறிக்கூடம், அவர்களது வீடுகளை அளவீடு செய்யும் திட்டத்தை தடுத்து, நெசவு தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி