உ.பி: சுல்தான்பூரில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.