2வது இடத்தை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது என விசிக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தமிழ்நாட்டில் 1977ல் இருந்து திமுகவா? அதிமுகவா? என்று நீடித்து வரும் அரசியல் சூழ்நிலையை மாற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது; அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடிக்க பாஜக நினைக்கிறது. இதற்கு அதிமுக இடம் கொடுத்துவிடக் கூடாது" என்று கூறியுள்ளார்.