சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் (வடக்கு) - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு சிறப்பு ரெயில் (06083) வருகிற 12- ந் முதல் ஜனவரி 28-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6. 05 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனேஸரி, கோட்டையம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5. 07 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5. 17 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 10. 55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (06084) வருகிற 13-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை புதன்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து மதியம் 12. 45 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பெங்களூரு வழியாக மாலை 4. 57 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5. 07 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6. 45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.