ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (நவம்பர் 30) தேங்காய் ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். எடை: 11.67 குவிண்டால். மதிப்பு: ரூ.44,437/-. காய் விலை அதிகபட்சம்: ரூ.34.25. குறைந்தபட்ச விலை: ரூ20.50. சராசரி விலை: ரூ.27.37.