கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு

81பார்த்தது
கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு

தீபாவளியை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடந்தது. கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர் சேவை சாதித்தார்.
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
பெரிய மாரியம்மன் உற்சவர், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
சோழீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில், வ. உ. சி. , ஆஞ்சநேயர் கோவில், கொங்காலம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி