கோபிசெட்டிபாளையம் முத்துஷா வீதியில்; வயதான தம்பதியனிர் நடத்தி வரும் டி கடையில் கேண்டிமேன் சாக்லேட்டில் வரும் போலி 110 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி சென்ற மர்ம நபர்.
கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்த வயதான தம்பதியினரான பன்னீர்செல்வம்- லட்சுமி, சில வருடத்திற்கு முன்பு சக்கரை வியாதியில் பன்னீர்செல்வம் ஒரு காலை இழக்க நேரிட்டது, இந்த நிலையில் பன்னீர்செல்வம்- லட்சுமி தம்பதியினர் முத்துஷா வீதியில் டீ கடை வைத்து அன்றாட நடக்கும் வியாபாரத்தில் குடும்பம் நடத்திவருகின்றனர்
இந்த நிலையில் இரவு மின்சாரம் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் 100 ரூபாய்க்கு சில்லறை வேண்டுமென்று கேட்டுள்ளார் இரவு மின்சாரம் இல்லாத நேரத்தில் பன்னீர்செல்வமும் 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்து அனுப்பி உள்ளார். பின்னர் மின்சாரம் வந்தவுடன் பார்த்தபோது கேண்டிமேன் சாக்லேட்டில் வரும் போலி 110 ரூபாய் நோட் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் டி கடை நடத்தி வரும் வயதான தம்பதியனர் வேதனையடைந்துள்ளனர்.