புரோ கபடி 11வது லீக் நேற்று (டிச.21) இரவு 7:30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்தின. இதனால் ஆட்ட நேர முடிவில் 40-40 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 33-31 என்ற புள்ளிகணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.