சென்னை: திமுக தலைமை செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.22) காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் ஆக்க பணிகள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.