ஈரோடு மாவட்டம் எல்லையில் உள்ள, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்தைச் சோ்ந்த தெங்குமரஹாடா கிராமம் மாயாற்றின் கரையில் உள்ள ஒரு அடா்ந்த தீவு பகுதியாகும். இந்தப் பகுதியை சுற்றிலும் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. தெங்குமரஹாடா கிராமத்துக்கு நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை கடந்துதான் போக முடியும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகா் சென்று அங்கிருந்து சுமாா் 25 கி. மீ. அடா்ந்த வனப் பகுதி வழியாக தெங்குமரஹாடா கிராமத்துத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்துக்குச் செல்ல கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மாயாற்றின் கரையில் நிறுத்தப்படும். ஆற்றை பரிசலில் கடந்துதான் கிராமத்துக்குள் செல்ல முடியும். இந்த கிராமத்தை சேர்ந்த பெண் பிரசவ வலி காரணமாக அவரை அவரது உறவினர்கள் பரிசலில் ஏற்றி கரைக்கு கூட்டி வந்து. தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனக்கு அழைத்துச சென்றனர். தற்பொழுது நீலகிரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள் பரிசலை கூட்டிச் சென்றனர்.