மூலிகை இலைகள் எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியவை. நமது வீட்டுவைத்தியங்களில் மூலிகலை இலைகளுக்கு என தனியிடம் இருக்கிறது. அந்த வகையில், துளசி, முருங்கை இலை, புதினா இலைகள், கீரைகள், கறுவேப்பிலை ஆகியவற்றை சாப்பிடலாம். உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இந்த இலைகளை நீங்கள் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதை சாப்பிடும்போது இதன் ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சி எடுக்கும்.