அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் சேற்றில் புதைந்த அரசு பேருந்து
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது இந்த சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான கனரக வாகனம் இலகு ரக வாகனம் இருசக்கர வாகனம் என வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் மேலும் பர்கூர் மலைக் கிராமத்தில் 34 குக் கிராமங்கள் உள்ளன இந்த கிராம பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது மேற்கு மலை கிழக்கு மலை என இரு பிரிவுகளாக உள்ள மலைப்பகுதிகளில் மேற்கு மலைப் பகுதிகளில் மினி பேருந்துகள் கொங்கடை வரை இயக்கப்பட்டு வருகிறதுகிழக்கு மலை பகுதிகளுக்கு மடம் வரை செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது இந்த நிலையில் இரண்டு தினங்களாக மலைப்பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் நேற்று கிழக்கு மலைப் பகுதிக்கு சென்ற அரசு பேருந்து சேட்டிரில் சிக்கிக் கொண்டது பேருந்தில் சென்ற பயணிகளை இறக்கி விடப்பட்டு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோப் கட்டி இழுக்கப்பட்டது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிரமப்பட்டு வாகனத்தை மேலே கொண்டுவரப்பட்டது மேலும் இதனால் அந்த பகுதியில் இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது