கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது,
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது,
கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாளும் இந்திய வானிலை ஆய்வு மையம் இனிவரும் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாளும் பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்தாளும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (15. 10. 2024) மற்றும் நாளை(16. 10. 2024) இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு வர நீர்வள துறை தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொடிவேரி அணை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அணைக்கு வாராதவாறு அணையின் இரு புறமும் பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,