கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் நேற்றிரவு (டிச., 21) முதலை ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட சிலர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சுமார் 5 அடி நீளமுள்ள முதலையை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள வாள்காரமேடு ஏரியில் முதலை விடுவிக்கப்பட்டது.