இடுக்கி அருவிக்குத்து நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த கல்லூரி மாணவியும், மாணவனும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் முட்டம் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் அக்சா ரெஜி மற்றும் டொனல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பத்தனம்திட்டாவை சேர்ந்த அக்சா ரெஜியும், இடுக்கி முறிக்காசேரியைச் சேர்ந்த டோனல் ஆகிய இருவரும் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.