சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதி.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி நிலமட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளது. தொடர் மழை காரணமாக திம்பம் மலைப் பகுதியில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். மலைபகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்து உள்ளதால் இருள் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது.
அதே போல் தாளவாடி தலமலை, ஆசனூர், கேர்மாளம் ஆகிய பகுதிகளிளும் பனிமூட்டம் நிலவியது.