ஈரோடு கோட்டை பகுதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்த முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதாக கூறிய குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் மோசடி நிகழ்ந்துள்ள தாகவும், இந்த கோவிலின் செயல் அலுவலர் மூலம் கடந்த 2017ம்ஆண்டு 29 லட்சம் ரூபார் கோவில் சொத்துக்கள் கையாடல் நிகழ்ந்துள்ளதாகவும், இதனை தணிக்கை குழுவினர் ஆய்வ மூலம் வெளிவந்துள்ள போதும், இதில் தொடர்புடைய செயல் அலுவலர்கள் சந்திரசேகர், கங்காதரன், முத்துசாமி என 3பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருவர் மட்டும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறிய அவர், சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருந்தால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்றார்.
மேலும், கோவிலுக்கு வாழைமரம் கட்டியதற்காக ஒப்பந்ததாரர்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தனக்கு கீழ் பணிசெய்யும் பணியாளர்கள், பேரில் காசோலை போட்டு பணம் எடுப்பது என 28முறை மோசடி நிகழ்ந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இந்த துறையை சேர்ந்த இணை இயக்குநர், கமிஷனர் ஏன் 700நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.