ஈரோடு புறநகர் பகுதிகளில் மிதமான மழை
ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. நேற்று முன் தினம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை வானம் இருண்டு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் திடீரென லேசான காற்றுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், புறநகரங்களில் தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.