BREAKING: பிரேசிலில் பஸ் விபத்தில் 38 பேர் பலி

65பார்த்தது
BREAKING: பிரேசிலில் பஸ் விபத்தில் 38 பேர் பலி
தென்கிழக்கு பிரேசிலில் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து, லாரி மீது மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை அதிகாலை மினாஸ் ஜெரெய்ஸ் மாநிலத்தில் லாஜின்ஹா ​​நகருக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியுள்ளது. லாரி டிரைவர் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது பிரேசிலின் நெடுஞ்சாலைகளில் 2007-க்குப் பிறகு நடந்த மிக மோசமான விபத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி