’புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற தலைமறைவு குற்றவாளி கைது

83பார்த்தது
’புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற தலைமறைவு குற்றவாளி கைது
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் மெஷ்ரம் என்பவர் மீது இரண்டு கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்பட 27 பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவான விஷாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக தேடப்பட்டு வரும் விஷால், ‘புஷ்பா 2’ படம் பார்க்க திரையரங்கிற்குச் சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விஷாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி