தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று (டிச. 21) சென்னை குரேம்பேட்டை பகுதியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ’புஸ்ஸி’ ஆனந்த் கலந்து கொண்டார். விழா மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில் ஆனந்த் உள்ளிட்ட சிலர் அதில் அமர்ந்திருந்தனர். மைக்கில் கட்சியினர் பேசிக்கொண்டிருந்த போது ஆனந்த உட்கார்ந்தபடியே தூங்கி வழிந்ததை காண முடிந்தது.