ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதாலேயே, அவரைப் போலவே தன்னை நினைத்து எடப்பாடி பழனிசாமி வேறு உலகத்தில் வாழ்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இபிஎஸ்க்கு சுயநலம், துரோகம் செய்வதை தவிர வேற எதுவும் தெரியாது. தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் எந்த துரோகத்தையும் செய்யக் கூடியவர்தான் இபிஎஸ்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.