அந்தியூர் - Anthiyur

முழு கொள்ளளவில் நீடிக்கும் குண்டேரிபள்ளம் வரட்டுப்பள்ளம் அணை

முழு கொள்ளளவில் நீடிக்கும் குண்டேரிபள்ளம் வரட்டுப்பள்ளம் அணை

பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93. 39 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 7, 033 கன அடி நீர் வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1, 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை, காலிங்கராயன் பாசனங்களுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41. 75 அடியில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33. 46 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22. 51 அடியை நெருங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా