முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பவர்ஃபுல், கரீஷ்மாட்டிக் லீடர்' ஆக இருக்கிறார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிச., 22) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், நமது கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எந்த தேர்தலிலும் தோற்கவில்லை என்றார்.