திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தபின் அம்மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்துச் செல்லப்படுகின்றன. 6 இடங்களில் அடையாளம் காணப்பட்டு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது” என்றார்.